
பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் கழிவுநீரில் இறங்கி தொழிலாளி சுத்தம் செய்யும் படத்தை வெளியிட்டு மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. பாதாளச் சாக்கடை கழிவுநீரில் தொழிலாளியை இறக்கி சுத்தம் செய்ய வைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்களா? என மார்க்சிஸ்ட் கேள்வி எழுப்பியுள்ளது. பாதாளச் சாக்கடை கழிவுநீரில் இறங்கிய தொழிலாளியின் கால்களை முன்பு கேமராமுன் செய்தது போல கழுவுவாரா பிரதமர்?; கழிவுநீர் தொட்டியில் தொழிலாளி இறங்கி சுத்தம் செய்யும் படம் உலகம் முழுவதும் பரவினால் என்ன ஆகும்? என மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியது.