தொங்கா நாட்டில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், முழு ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது.
தொங்கா தீவுப் பகுதி எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமி பாதிப்புகளில் இருந்து மெதுவாக மீண்டுவரும் நிலையில், தற்போது தலைநகர் Nuku’alofa-வில் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அண்மையில் எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமியைத் தொடர்ந்து மனிதாபிமான உதவிகள் பெறப்பட்டுவரும் துறைமுகப்பகுதியில் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் சியாவோசி சோவலேனி தெரிவித்துள்ளார்.
106,000 மக்கள் தொகை கொண்ட தொங்கா தீவில் சுமார் 60% மக்கள் இரு தடுப்பூசி டோஸ்களையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.