ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் அனைத்து கொவிட் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் இனி சமூக ரீதியாக முக்கியமான நோயாக கருதப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.
ஐரோப்பிய நாடுகளிலேயே முகக்கவசம் உட்பட அனைத்து கொவிட் கட்டுப்பாடுகளையும் நீக்கிய முதல் நாடாக டென்மார்க் ஆகும்.
Omicron துணை மாறுபாடான BA.2 வகை வைரஸால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், டென்மார்க் அரசு அந்நாட்டிலுள்ள அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளது.
டென்மார்க்கில் ஒரு நாளைக்கு சுமார் 40,000 முதல் 50,000 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.