ஒப்பீட்டளவில் இலங்கையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் துணைச் செயலாளர் டொக்டர் நவீன் டி சொய்சா தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டமை மற்றும் உரிய தகவல்களை வழங்கத் தவறியமை ஆகிய ஏதுக்களினால் உலக கொவிட் மரண வீதத்தை விடவும் இலங்கையில் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கொவிட் மரண வீதம் 1.5 ஆக காணப்படுவதுடன் இலங்கையில் இந்த எண்ணிக்கை 2.54 ஆக காணப்படுகின்றது.
இந்த புள்ளிவிபரத் தகவல்களின் அடிப்படையில் எதிர்காலத்தில் அபாய நிலை ஏற்படும் என்பதனை புரிந்து கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.