பொலன்னறுவை மாவட்டத்தில் இம்முறை அரசாங்க உத்தரவாத விலையின் கீழ் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்காக 20 நிலையங்கள் அமைக்கப்பட்டு , நேற்று முதல் நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ நாட்டு நெல்லுக்கு 92 ரூபாவும், சம்பா நெல் ஒரு கிலோவிற்கு 94 ரூபாவும், கிரி சம்பா நெல் ஒரு கிலோவிற்கு 97 ரூபாவும் அரசாங்கத்தினால் உத்தரவாத விலையாக வழங்கப்படும் என நெல் சந்தைப்படுத்தல் சபையின் பொலன்னறுவை பிராந்திய முகாமையாளர் நிமல் ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த பருவத்தில் பொலன்னறுவை மாவட்ட விவசாயிகளிடமிருந்து 50,000 மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.