வரகாபொல, துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டி ஒன்றும் மற்றும் அரச பேருந்து ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, இன்று காலை காலி – பூஸா – வெல்லபட ரயில் கடவையில் ரயில் மோதி முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.