ஜப்பான் போர் விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் மாயமாக மறைந்து விட்டது.
தென் கிழக்காசிய நாடான ஜப்பானில் மத்திய இஷிகாவா பிராந்தியத்தில் கொமட்சு விமான படை தளம் உள்ளது. இங்கிருந்து புறப்பட்ட ‘எப் 15’ போர் விமானம் ஒன்று சிறிது நேரத்தில் திடீரென மாயமாக மறைந்தது. விமான தளத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் சென்ற விமானம் அதன் பின், தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தின் ‘ரேடார்’ சாதனத்தில் இருந்து காணாமல் போனது குறித்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து விமான படை செய்தி தொடர்பாளர் கூறும்போது, ‘மாயமான விமானத்தில் இருவர் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஆனால் அதில் எத்தனை பேர் இருந்தார்கள் என்ற விபரம் தெரியவில்லை’ என்றார். காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் விமானப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.கடந்த, 2019ல் ‘எப்-35ஏ’ போர் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானி பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.