அமெரிக்க அழகி பட்டம் வென்ற செஸ்லி கிரிஸ்ட், மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்காவில் 2019ல், அந்நாட்டு அழகி பட்டத்தை வென்றவர் செஸ்லி கிரிஸ்ட், 30. தொலைக்காட்சி தொகுப்பாளினி, மாடல் என பல பரிமாணங்களை வெளிப்படுத்திய அவர், 2019ல் நடந்த பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் 10 இடங்களுக்குள் வந்து அசத்தினார்.இவர், நியூயார்க்கில் உள்ள 90 அடுக்கு மாடிகளை உடைய குடியிருப்பு கட்டடத்தில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை, ஒன்பதாவது தளத்தில் உள்ள தன் வீட்டின் பால்கனியில் இருந்து, செஸ்லி கீழே குதித்துள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.