ஹிக்கடுவ – பவளப்பாறை சரணாலயத்தில் அரியவகை மீன்களை பிடித்த இருவரை வனஜீவராசி அதிகாரிகள் கைது செய்துள்ளதோடு இதன்போது பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக குறித்த மீன்களை பிடித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.