மர்மமாக உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதி

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பார்வீதி புன்னைச்சோலையில் மர்மமாக உயிரிழந்த நிலையில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இன்று சடலமாக  மீட்கப்பட்டுள்ளார்.

கருவப்பங்கேணியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய மாசிலாமணி தர்மரட்ணம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மட்டு ரயில் நிலையத்தின் முன்னால் உள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்து முச்சக்கரவண்டியை செலுத்தி வருகிறார்.

அதற்கமைய , கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு அதிகாலை 4 மணிக்கு வந்தடையும் ரயிலில் வரும் பிரயாணிகளை ஏற்றி செல்வதற்காக  சம்பவதினமான இன்று அதிகாலை 4 மணிக்கு வீட்டைவிட்டு முச்சக்கரவண்டியில் சென்றுள்ளாதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், ரயில் நிலைய முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்து புன்னைச்சோலை பகுதிக்கு சென்ற வேளையே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE