இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி செயலகம் பதிவிட்டுள்ள ருவீட்டரில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஹைதராபாத்தில் உள்ள துணை ஜனாதிபதி, எம். வெங்கையா நாயுடுவுக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் தொற்று உறுதியானது. அவர் ஒரு வாரம் சுய தனிமையில் இருக்க முடிவு செய்துள்ளார்.
அவருடன் தொடர்பு கொண்ட அனைவரையும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்,” என்று இந்திய துணை ஜனாதிபதி செயலகத்தின் ருவீட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.