
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடர் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்காக இலங்கை அணி அவுஸ்ரேலியாவுக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.