கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி நீடிப்பு

கடந்த ஆண்டுக்குரிய கல்விப்பொதுதராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, விண்ணப்பங்களுக்கான இறுதி திகதி இம்மாதம் 20ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.doenets.lk) அல்லது www.onlineexams.gov.lk/eic அல்லது திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கைப்பேசி செயலி ஊடாக (Mobile App ‘Exams) விண்ணப்பங்களை இணையத்தளத்தில் சமர்ப்பிக்க முடியும்.

அரச பாடசாலை மாணவர்கள், சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் தலைமையாசிரியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் பூர்த்தி செய்யப்பட்டவுடன், அதன் நகலைப் பெற்று, தேவைப்படும்போது சமர்ப்பிப்பதற்காக விண்ணப்பதாரரின் பாதுகாப்பில் கவனமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE