
பிரெஞ்சு பொலினீசியாவின் தஹிதி கடற்கரையில் 100 அடி ஆழத்தில் 3 கிலோ மீட்டர் பரப்பில் ரோஜாக்கள் போன்ற வடிவிலான பழமையான பவளப்பாறைகளை கடல்சார் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கடலின் “ட்விலைட் மண்டலம்” என்று அழைக்கப்படும் ஆழத்திற்கு டைவிங் பயணத்தின் போது நவம்பரில் இந்த பாறை கண்டுபிடிக்கப்பட்டது
இத்தகைய ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பவளப்பாறைகளில் இது மிகப்பெரிய ஒன்றாகும் என்று இந்த பணியை வழிநடத்திய ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு கூறுகிறது.
இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளில் இதுபோன்று இன்னும் பல இருக்கலாம் என்றும், நமக்கு அதுகுறித்து தெரியவில்லை எனவும் யுனெஸ்கோவைச் சேர்ந்த டாக்டர் ஜூலியன் பார்பியர் கூறியுள்ளார்.
“இது ஒரு கலை வேலை போல இருந்தது,” என்று நீருக்கடியில் புகைப்படம் எடுக்கும் பிரெஞ்சு கலைஞர் அலெக்சிஸ் ரோசன்ஃபீல்ட் கூறுகிறார்.