
இந்தியாவின் புகழ்பெற்ற விளையாட்டு நட்சத்திரங்களில் ஒருவரான முன்னாள் விம்பிள்டன் இரட்டையர் சாம்பியனான சானியா மிர்சா 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபனில் பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் தோல்வியடைந்த பிறகு சானியா மிர்சா இதனை அறிவித்தார்.
35 வயதான மிர்சா, 2005 ஆம் ஆண்டு WTA ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் ஆவார்.