எரிபொருள் இன்மையால் சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்திலும் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஊடாக 900 மெட்ரிக்தொன் எரிபொருளை இலங்கை மின்சார சபைக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் இன்மையால் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பிற்பகல் 4 மணி முதல் இரவு 10 மணிவரை சுமார் ஒன்றரை மணிநேர மின்சார துண்டிப்பை, ஏற்படுத்த நேரிடும் என மின்சார பொறியியலாளர் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன குறிப்பிட்டுள்ளார்.