இலங்கையின் மூத்த பெண் பாடகியும் இசைக்கலைஞருமான நீலா விக்ரமசிங்க இன்று காலமானார்.
70 வயதுடைய நீலா விக்ரமசிங்க, கொழும்பு விசாகா வித்தியாலயத்தில் முன்னாள் இசை ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். அவர் ‘அனே சேர் மற்றும் ‘ரன்டிக்கிரி சினா’ போன்ற பிரபலமான பாடல்களைப் பாடியுள்ளார்.
இத்தாலியின் மிலானோ நகருக்கான கொன்சியூலர் ஜெனரலாக பதவியேற்று சில நாட்களே கடந்திருந்த நிலையில் இன்று காலமானார்.