
ஹட்டன்-சிங்கமலை குளத்திலிருந்து ஆணொருவரின் சடலத்தை இன்று காலை மீட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சிங்கமலை பகுதிக்கு விறகு வெட்டச் சென்றவர்கள் ஹட்டன் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே சடலம் மீட்கப்பட்டுள்துடன், இவர் யாரென இதுவரையில் அடையாளம் காணவில்லையென ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இக்குளப்பகுதியில் இருந்தே ஹட்டன் நீர் வழங்கல் சபைக்கு நீர் விநியோகம் வழங்கப்படுகின்றது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கவுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.