
16 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 2 ஆம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில், அநுராதபுரத்தில் செய்தியாளர்களிடம் கருத்துரைத்த அவர், எதிர்வரும் நாட்களில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.
முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டு 3 மாதங்களை கடந்தவர்களுக்கு, இரண்டாம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.
அதற்கு தேவையான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.