
வடக்கில் மூன்று பிரதேச செயலாளர்களிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலாளராக கடமையாற்றிவந்த எஸ்.கிருஸ்ணேந்திரன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராகவும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த பரமோதயன் ஜெயராணி முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராகவும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த ரி.அகிலன் பூநகரி பிரதேச செலாளராகவும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த இடமாற்றம் கடந்த வருடம் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் நடைமுறையாகாத நிலையில் தற்பொழுது மீண்டும் வழங்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் குறித்த பிரதேச செயலாளர்கள் புதிய பிரதேச செயலகங்களில் எதிர்வரும் புதன்கிழமை கடமை பொறுப்புக்களை ஏற்கவுள்ளனர்.