மத்துகம-ஹொரணை பிரதான வீதியில் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் பலத்த காயமடைந்தவர் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் புளத்சிங்கள, திப்போட்டாவ பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.