
இலங்கை மின்சார சபைக்கு நாளாந்தம் 1,500 மெற்றிக் தொன் டீசலை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபன தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நாளாந்தம் விநியோகிக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின்னுற்பத்தி இயந்திரங்களை இயக்க முடியாமையால் நேற்று நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தேசிய மின் கட்டமைப்பில் 300 மொவோட் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது