சில கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் அவசர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை 24 மணித்தியாலங்களுக்கு முன்னெடுக்கப்படும் என தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து எங்களது உறுப்பினர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாமல் உள்ளது.
சாதாரண நேர அட்டவணையை அமுல்படுத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டு ஆசன ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் இறுதி தருணத்தில் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
இதன்காரணமாக ரயில் பயணிகளும் ரயில் நிலைய அதிபர்களும் பாதிப்படைவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரயில் நிலைய அதிபர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, 200க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், 80 ரயில் மட்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில் திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.