பொரளை, வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான மூவரிடமும் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அவர்கள் மூவரும் தற்போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர்.
மேற்படி தேவாலயத்தில் நேற்று மாலை 4.45 மணியளவிலேயே கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
தேவாலயத்துக்கு வருகைதந்த ஒருவர், கைக்குண்டு இருப்பதைக்கண்டு அது தொடர்பில் அருட்தந்தையருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து உரிய தரப்புகளுக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், விசேட அதிரடிப்படையினரும், குண்டு செயலிழப்பு பிரிவினரும் சம்பவ இடத்துக்கு வந்து, கைக்குண்டை மீட்டனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரில், கைக்குண்டு கொண்டு சென்றவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.