பட்டதாரி பயிலுனர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையேற்கும் நிகழ்வு!

பட்டதாரி பயிலுனர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையேற்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று(11) காலை 9.30மணியளவில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது நேற்றைய தினத்தில் 115 பட்டதாரி பயிலுனர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தராக தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

இந் நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் குறித்த பட்டதாரி பயிலுனர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE