எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியின் முக்கிய உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு ரணில் விக்கிரமசிங்க கடிதம் மூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகளை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 13 அம் திகதி நிறைவு செய்ய ஜனாதிபதி தீர்மானித்திருந்த நிலையில், நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் ஜனவரி 18 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் ஜனவரி 19, 20 அல்லது 21 ஆம் திகதிகளில் குறித்த விவாதத்தை நடத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு ரணில் விக்கிரமசிங்க குறித்த கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.