சீனாவில் தலைநகர் பெய்ஜிஙில் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரில் கனேடிய அதிகாரிகள் பங்கேற்கப் போவதில்லை என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சீனாவின் மனித உரிமை நிலைமைகளை கருத்திற் கொண்டு சில நாடுகள் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரை ராஜதந்திர ரீதியில் புறக்கணிக்க தீர்மானித்துள்ளன. அந்தப்பட்டியலில் கனடாவும் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஆண்டு நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரை கனடா ராஜதந்திர ரீதியில் பகிஷ்கரிக்கும் என பிரதமர் ஜஸ்ட்ன் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார்.
சீனாவில் உய்குர் முஸ்லிம் சிறுபான்மையினர் இனச் சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்படுகின்றனர் என சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ராஜதந்திர ரீதியில் பகிஷ்கரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.