இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கான சாத்தியங்களை ஓய்வு பெற்ற இராணுவ விமானி கர்னல் விஜய்வீர் சிங் தெரிவித்துள்ளார்.
கோவையிலிருந்து இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்த Mi-17V5 ஹெலிகாப்டர், குன்னூரில் விழுந்து விபத்துக்குள்ளானது. அண்மையில் வெளியான தகவலின் படி, ஹெலிகாப்டரில் பயணித்த பிபின் ராவத் உட்பட 13 பேர் இறந்துவிட்டதாகவும், ஒருவர் மருத்துவமனையில் 80 சதவித தீ காயங்களுடன் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கான சாத்தியங்களை ஓய்வு பெற்ற இராணுவ விமானி கர்னல் விஜய்வீர் சிங் விளக்கியுள்ளார்.
கர்னல் விஜய்வீர் சிங் கூறியதாவது, இது மிகவும் துயரமான சம்பவம். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடத்திருக்கலாம். ஆனால் தற்போது விசாரணை நடைபெற்று வரும் சூழலில் ஏதுவும் கூற முடியாது.
நாம் காத்திருக்க வேண்டும். என் அனுபவத்தில், ஹெலிகாப்டரில் எதாவது கோளாறு ஏற்படும். அதனால் உடனடியாக ஹெலிகாப்டரை தரையிறக்க வேண்டிய சூழல் ஏற்படும், தரையிறக்கும் போது தூதிஷ்டவசமாக விபத்து நடக்கலாம்.
மோசமான வானிலை காரணமாக நிறை சிரமம் ஏற்படும். மற்றபடி இது இரண்டு இன்ஜின்கள் கொண்ட ஹெலிகாப்டர், அவசரம் ஏற்பட்டால் உடனே தெளிவான இடத்திற்கு பயணித்து தரையிறக்க முடியும்.
ஆனால், விபத்து நடந்த இடம் மிகவும் மலைப்பாங்கான பகுதியாக இருக்கிறது. நிறைய மரங்கள், அடர்த்தியான காடுகள் நிறைந்த பகுதியாக தெரிகிறது.தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை காரணமாக அவர்கள் உடனடியாக ஹெலிகாப்டர் கீழே இறக்க நேர்ந்திருக்கலாம், அப்போது துரதிஷ்டவசமாக விபத்தில் சிக்கி இருக்கலாம்.
சம்பவத்தில் இடத்தில் ஹெலிகாப்டர் ரோட்டாரில் சிக்கி மரங்கள் விழுந்து கிடப்பதை காண முடிகிறது. சம்பவம் நடந்த இடத்தில் பார்க்கும் போது வானிலை மிக மோசமாக இருக்கிறது. பார்வைத்திறன் மிகவும் குறைவாக இருக்கிறது என கர்னல் விஜய்வீர் சிங் தெரிவித்துள்ளார்.