கனடாவில் ஊழியர்களுக்கு தட்டுப்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொழிற் சந்தையில் ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலைமை உருவாகியுள்ளது என்ற காரணத்தினால் கொரோனா தடுப்பூசி குறித்த சட்டங்களிலும் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் Omicron திரிபு பரவி வரும் நிலையிலும், ஊழியர்களுக்கான தட்டுப்பாட்டினால் கட்டாய கொரோனா தடுப்பூசி நியதிகளை நிறுவனங்கள் தளர்த்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களுக்கு பணியில் நீடிக்க அனுமதி வழங்குவதில்லை என கனேடிய அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத பெரும் எண்ணிக்கையிலான பொதுத்துறை பணியாளர்களுக்கு சம்பளமற்ற அடிப்படையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
எனினும், போதியளவு ஆளணி வளம் இல்லாத காரணத்தினால் நிறுவனங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளதவர்களுக்கு பணிகளில் ஈடுபட அனுமதி வழங்கியுள்ளது.