ஒமிக்ரோன் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தங்கள் நாட்டின் எல்லையை இரண்டு வாரங்களுக்கு மூடுவதாக இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்னாபிரிக்காவில் கொரோனாவின் புதிய வைகையான ஒமிக்ரோன் கண்டறியப்பட்டது. இதனையடுத்து 7 ஆப்பிரிக்கா நாடுகளுக்கான விமான சேவையை நவம்பர் 26 ஆம் திகதி முதல் தடை விதித்தது.
இந்நிலையில் அந்நாட்டில் ஒருவருக்கு புதிய வகை ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனை அடுத்து, வெளிநாட்டினர் இஸ்ரேலுக்குள் நுழைய இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாகவும் பிரதமர் நஃப்தலி பென்னெட் அறிவித்துள்ளார்.