நெடுஞ்சாலையில் சிதறி கிடந்த பணம் ..!குஷியில் அள்ளிச்சென்ற மக்கள்..!

அமெரிக்காவில், நெடுஞ்சாலை ஒன்றில் பணம் சிதறிக் கிடந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தில், அண்மையில் பணம் நிரம்பிய கண்டெய்னருடன் டிரக் ஒன்று டிரக் கெனான் சாலையில் சென்று கொண்டிருந்த போது கண்டெய்னர் திறந்ததால், ரூபாய் நோட்டுகள் சாலையில் பறக்க தொடங்கின.

சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்தி பணத்தை அள்ளிச் சென்றனர்.

இது குறித்து கலிபோர்னியா தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பணத்தை எடுத்துக் கொண்டிருந்தவர்களிடம், திருப்பி பணத்தை அளிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். பலர் பணத்தை திருப்பி அளித்தனர். சிலர் பணம் கிடைத்தால் போதும் என அள்ளிக் கொண்டு சென்றனர்.

பணம் கொட்டும்போது அந்த வழியாக சென்ற வாகனங்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. அதை வைத்து பணத்தை எடுத்துச் சென்றவர்களை கண்டுபிடித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE