கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகள் கடந்த ஆண்டு நாடு தழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்தின.
எனினும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால் உலக நாடுகள் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்தி மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றன.
அதேவேளையில் ஒரு சில நாடுகளில் கொரோனா வைரசின் புதிய அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரசின் 5-வது அலை அச்சுறுத்தி வருகிறது.
இதன் காரணமாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கை அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. வருகிற 22-ந்தேதி முதல் இந்த ஊரடங்கு அமலுக்கு வரும் என அந்த நாட்டின் பிரதமர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க் அறிவித்துள்ளார்.
மேலும் அடுத்த ஆண்டு (2022) பிப்ரவரி 1-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சுமார் 20 லட்சம் பேருக்கு மட்டும் அந்த நாட்டு அரசு ஊரடங்கை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.