ஸ்வீடனில் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் ஸ்வீடனில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது.
இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு அறிகுறிகள் இருந்தாலும், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை என்று அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களில், ஸ்வீடனில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 30 சதவீதம் குறைந்துள்ளது. இலவச கொரோனா பரிசோதனை பல இடங்களில் நிறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. பல மருத்துவ நிபுணர்கள் ஸ்வீடனின் இந்த நடவடிக்கை ஆபத்தானது என்று நம்புகிறார்கள்.