அமெரிக்காவின் முன்னாள் இராணுவ ஜெனெரலும், வெளியுறவு அமைச்சருமான காலின் போவெல் கடத்த திங்கட்கிழமை தனது 84 வயதில் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு முன்னாள் அதிபர்கள் ஒபாமா,ஜார்ஜ் புஷ் மற்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்கு மாறாக விமர்சித்துள்ளார்.
அவர் கூறியதாவது,
ஈராக் போரின் பொது காலின் போவெல் மிகப்பெரிய தவறு இளைத்துவிட்டார் என குற்றமசாட்டியுள்ளார். மேலும் உயிரிழந்த அவரை ஊடகங்கள் பொய்யாக போற்றி புகழ்வதாகவும் டிரம்ப் விமர்சித்துள்ளார். என்னதான் அவர் குடியரசு கட்சி உறுப்பினராக இருந்தாலும், தந்து சொந்த கட்சியை விமர்சித்து பேசுவதில் முதல் நபராக இருப்பார் என டிரம்ப் கூறியுள்ளார். இறுதியாக என்னதான் அவர் தவறு செய்திருந்தாலும் அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என டிரம்ப் கூறியுள்ளது தற்போது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.