பிரித்தானியாவின் Snowdonia நகரில் ஞாயிறு இரவு திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கம் அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது.
கான்வே பள்ளத்தாக்கு பகுதி மக்கள் சுமார் 8 ,மணியளவில் தங்களுக்கு விசித்திர சத்தம் கேட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
வாகனம் ஏதும் அப்பகுதி வழியாக கடந்து சென்றிருக்கலாம் எனவும், அல்லது இடியாக கூட இருக்கலாம் என்றே மக்கள் கருதியுள்ளனர்.
ஆனால், அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 1 என பதிவாகியிருந்ததாகவும் பிரிட்டிஷ் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை எனவும், மக்கள் நில அதிர்வை மட்டுமே உணர்ந்திருக்க வாய்ப்புள்ளதாகவும், ஆனால் மிருகங்கள் கண்டிப்பாக பயந்துபோயிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
பெரும்பாலான மக்கள் அந்த பெரும் சத்தம் கேட்டு பதறியதாகவே குறிப்பிட்டுள்ளனர்.