எரிபொருள் விலை அதிகரித்தால் பேருந்து கட்டணம் அதிகரிக்கும்

எரிபொருள் விலை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டால் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படும் என பேருந்து சங்கம் எச்சரித்துள்ளது.

தற்போதைய காலப்பகுதியில் பேருந்து துறை பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிக்கும் அவதானம் உள்ளமையினால் எதிர்வரும் நாட்களில் பேருந்து கட்டணத்திலும் திருத்தம் மேற்கொள்ள நேரிடும் என இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன (Gemunu Wijeratne) தெரிவித்துள்ளார்.

இதுவரையில் நூற்றுக்கு 30 வீதம் மாத்திரமே பேருந்து இயங்குகின்றது. பேருந்து துறைக்கான மேலதிக பாகங்கள் மற்றும் டயர்களின் விலைகள் பாரியளவு அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் எரிபொருள் விலை அதிகரித்தால் பொது போக்குவரத்துத்துறை பாரிய நெருக்கடியை சந்திக்கும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE