இலங்கையில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டதை தொடர்ந்து பொது மக்களின் கவனயீன அணுகுமுறை குறித்து அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பிற இடங்களில் மக்கள் அதிக அளவில் திரண்டு வருவதாக ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண (Channa Jayasumana) தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் மத்தியில் இன்று உரையாற்றிய அவர்,
கோவிட் நிலவரத்தின் அடிப்படையில் இலங்கையில் இன்னும் அச்சம் நீங்கவில்லை. எனினும் உடனடி ஆபத்தை உணராமல் மக்கள் விடயங்களை சாதாரணமாக எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிகின்றது என்றும் தெரிவித்துள்ளார். இந்த தொற்று நோய் நீண்ட காலமாக தொடர்கின்றது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், குறிப்பாக ஊரடங்கு உத்தரவு போன்ற நடவடிக்கைகள் நடைமுறையில் இல்லாத சூழ்நிலையிலும் , மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் சன்ன ஜெயசுமன கேட்டுக்கொண்டுள்ளார்.