உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு அமெரிக்க டொலர்களை வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal) தெரிவித்துள்ளார்.
கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களின் பெற்றோர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு பணம் செலுத்துவது குறித்து கவலை வெளியிட்டிருந்தனர். ஜனாதிபதி ஊடகப்பிரிவு ஒழுங்கு செய்திருந்த நிகழ்வில் இது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “இந்த விடயம் தொடர்பிலான சிரமத்தையும் தவிர்க்கும் பொருட்டு, அமெரிக்க டொலர்களை விடுவிக்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரம் தொடர்பான பிரச்சினைகள் மத்திய வங்கிக்கு தெரிவிக்கப்பட வேண்டும் எனவும், இதற்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.