சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல்லில் விளையாடுவாரா என்ற கேள்வி பலருக்கும் தற்போது எழுந்திருக்கிறது.
இது குறித்து இன்று தோனி, 2022ம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) ஒரு பகுதியாக இருப்பேன், ஆனால் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவேனா என்பது எனக்கு தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.
“அடுத்த சீசனில் நீங்கள் என்னை மஞ்சள் நிறத்தில் பார்ப்பீர்கள் ஆனால் நான் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவேனா என்பது எனக்கு தெரியாது” என்று தோனி இன்றைய போட்டியின் டாஸ் போடும் பொழுது கூறியிருக்கிறார்.
“2 புதிய அணிகள் வருகின்றன, பழைய வீரர்களை அணியில் தக்க வைப்பது பற்றி என்னவென்று எங்களுக்குத் தெரியாது,” என்றும் கூறியுள்ளார்.
40 வயதான தோனி இந்த மாத இறுதியில் தொடங்கும் 2021 டி 20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
சென்னையில் தான் என்னுடைய கடைசி போட்டியில் விளையாடுவேன் என்று சிறிது நாட்களுக்கு முன்பு இந்தியா சிமென்ட்ஸின் 75 வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக ஆன்லைன் உரையாடலில் தோனி கூறினார்.
தற்போது தோனி தலைமையிலான சிஸ்க்கே அணி ஐபிஎல் 2021ல் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.
தொடர்ந்து சிஸ்க்கே அணிக்காக விளையாடுவேன் என்று கடந்த ஆண்டு தோனி கூறியிருந்தார். தற்போது தோனியின் இந்த கருத்து அனைவருக்கும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அடுத்த ஆண்டும் தோனி சிஸ்க்கே அணிக்காக விளையாட வேண்டும் என்பதே சிஸ்க்கே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.