எதிர்வரும் நாட்களில் சமையல் எரிவாயுவின் விலை தவிர்க்க முடியாது அதிகரிக்க நேரிடும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண (Lasantha Alagiyawanna) தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பால், இலங்கையில் விலையை கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பின்னணியில் அமைச்சர் இந்த கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்போது நாளொன்றுக்கு சுமார் 70-90 மெட்ரிக் தொன் எரிவாயுவை உற்பத்தி செய்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண (Ramesh Pathirana) இதனை தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த தொகை நாட்டின் எரிவாயு தேவையில் 5 வீதம் முதல் 10 வீதம் வரையே பூர்த்தி செய்யமுடியும் என குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.