அமெரிக்காவில் ஒரு குடும்பத்தினர் பழைய பேருந்தை புதுப்பித்து நடமாடும் வீடாக மாற்றி சுற்று பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கில் அனைவரும் வீட்டிலே அடைந்து கிடந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு குடும்பம் பழைய பள்ளி பேருந்தை நடமாடும் வீடாக மாற்றி அமைத்துள்ளது.
அமெரிக்காவை இருப்பிடமாக கொண்டு வசித்து வருபவர்கள் எலிசபெத் மற்றும் அவரது கணவர் ஸ்பைக்.
இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளது. இது குறித்து எலிசபெத் கூறியது, எனது கணவருக்கு சிறு வயதில் இருந்தே பேருந்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பது ஆசை.
\இதனால் பழைய பேருந்தை 3,500 அமெரிக்க டாலருக்கு வாங்கினோம்.
முதலில் பேருந்தின் உள் வடிவமைப்பு, வெளிப்புறம், எங்களுக்கு பிடித்த நிறம் என சுமார் 15,000 டாலர் செலவு செய்து அனைத்தையும் மாற்றினோம்.
குளியலறை, மூன்று மெத்தைகள், சிறிய சமையல் அறை மாதிரியானவை இந்த பேருந்தில் உள்ளது. மின்சார பயன்பாட்டிற்கு சோலார் பேனல்களும் பொருத்தப்பட்டுள்ளது.
இப்போது 16 மாநிலங்களுக்கு இந்த பேருந்தின் மூலம் பயணம் செய்துள்ளோம். இது ஒரு புதுவித அனுபவமாக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.