நாவில் எச்சி ஊறும் சுவைமிக்க இலங்கை கருவாட்டு குழம்பு!

இலங்கையில் மீன் குழம்பை விட அதிகம் விருப்பபட்டு சாப்பிடக் கூடியது கருவாட்டு குழம்பு தான்.

சிங்களவர்கள் அதிகம் சோறுக்கு விரும்பி உண்ணு ஒரு உணவு என்று கூட கூறலாம். அதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை பொருட்கள்

கருவாடு – 200கிராம்

கறிகொச்சிக்காய் – 5

2 பச்சை மிளகாய் – 2

தக்காளி – 1

புளி – தேவையான அளவு

கடுகு – 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

பூண்டு

வெங்காயம் – பெரியது 3

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை

பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கறிக்கொச்சிக்காய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ,வெங்காயம், கடுகு, வெள்ளை பூண்டு ஆகியவற்றை பென்னிறமாக வதக்கவும்.

பின்னர் வேறு ஒரு பாத்திரத்தில் கருவாடை தனியாக பொறித்து எடுக்கவும். பொறித்து எடுத்த கருவாடை பொன்னிறமான பிரட்டலுடன் சேர்த்து மீண்டும் பிரட்டவும்.

உப்பு தேவைக்கு ஏற்ற அளவு சேர்த்து கொள்ளலாம். பிறகு 5 நிமிடம் கழித்து சாப்பிடலாம்.. இந்த கருவாடு பிரட்டலை ஒரு வாரம் கூட வைத்து சாப்பிடலாம். நாள் செல்ல செல்ல சுவையும் அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published.