உடலை பிட்டாக வைத்து கொள்ள பலர் தினமும் உடற்பயிற்சி செய்து வருகின்றனர், இது மிகவும் ஆரோகியமான ஒன்று தான். ஆனால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பலர் பால் சேர்த்துக்கொள்வதை தவிர்த்து விட்டு கிரீன் டீயை மட்டும் குடித்து வருகின்றனர்.
அதுவும் சிலர் ஒரு நாளைக்கு கணக்கே இல்லாமல் கிரீன் டீயை குடித்து வருகின்றனர். அப்படி குடிப்பதால் ஏற்படும் விளைவுகளை குறித்து பார்க்கலாம்..
தினமும் 2 முதல் 3 கப் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. கிரீன் டீயை அதிகமாக சாப்பிடுவது நல்லதை விட அதிக தீங்குகளை விளைவிக்கும்.
பெரும்பாலான மக்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று கப் கிரீன் டீ போதுமானது.
ஒரு நாளைக்கு அளவுக்கு மீறி கிரீன் டீ குடிப்பதால் இரத்த சோகை மற்றும் ஒரு நபரின் உணவில் இருந்து கிடைக்கும் இரும்பு சத்து தன்மையை கணிசமாகக் குறைக்கும்.
அதுபோல அதிக அளவு கிரீன் டீ வயிற்று கோளாறு, எரிச்சல், குமட்டல் மற்றும் வயிற்று உபாதைக்கு வழிவகுக்கும்.ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் கிரீன் டீயின் அதிகப்படியான நுகர்வு கல்லீரல் செல்களில் சைட்டோடாக்ஸிக் விளைவை ஏற்படுத்தும் மற்றும் கல்லீரலை சேதப்படுத்தும் எனவும் கூறப்படுகின்றது.
எனவே கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அதிகப்படியான கிரீன் டீ குடிப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேலும், கவலை மற்றும் தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்கள் அதிக அளவு கிரீன் டீயை உட்கொள்ளக்கூடாது எனவும் பரிந்துரைக்கப்படுகின்றது.