பொதுவாக பிளாக் காபி என்பது மிகவும் புகழ்பெற்ற ஒரு பானமாகும். காலையில் எழுந்ததும் மக்கள் நாடுவது ஒரு கப் காபியைத் தான்.
ஏனெனில் நமக்கு புத்துணர்ச்சி அளிப்பதில் காபி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
இந்த பிளாக் காபியை தினமும் நான்கு கப் காபி குடித்தால் உடலில் உள்ள கொழுப்புகள் சுமார் 4 சதவீதம் வரை குறையும் என கூறப்படுகிறது.
அந்தவகையில் இது எப்படி உடல் எடையை குறைக்க உதவுகின்றது என்பதை இங்கே பார்ப்போம்.
ஆய்வு கூறுவது என்ன?
காபியில் உள்ள குளோரோஜெனிக் அமிலம் ஆன்டி ஆக்ஸிடன்ட்டாக செயல்படுகிறது. இது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. உடல் எடை இழப்புக்கு உதவுகிறது. அதோடு உடலில் இரத்த சர்க்கரை அளவையும் பராமரிக்கிறது.
குளோரோஜெனிக் அமிலம் உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. இது இரவு உணவு அல்லது இரவு உணவிற்குப் பிறகு உடலில் உள்ள குளுக்கோஸ் உற்பத்தியை தாமதப்படுத்துகிறது. மேலும் புதிய கொழுப்பு செல்களின் உருவாக்கத்தையும் குறைக்கிறது.இதனால் உடலுக்கு மிகவும் குறைந்த கலோரி மட்டுமே கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.
எப்படி உதவுகின்றது?
காபியின் மூலப்பொருளான காஃபின் அதிகப்படியான பசியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதனால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
பச்சை காபி பீன்ஸ் ஆனது நம் உடலில் உள்ள கொழுப்புகளை எரிக்க உதவுகிறது. இது உடலில் கொழுப்புகளை எரிக்கும் நொதிகளை அதிகமாக வெளியிட உதவுகிறது. கல்லீரலை சுத்தப்படுத்துகிறது.
நம் உடலில் உள்ள தேவையில்லாத கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் மிதமிஞ்சிய கொழுப்புகளை நீக்குகிறது.
வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை எரிக்க உதவுகிறது.
பிளாக் காபி உடலில் இருந்து அதிகப்படியான நீரை அகற்ற உதவுகிறது. இதனால் எந்த ஆபத்தான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் எடை இழப்புக்கு உதவுகிறது.
குறிப்பு
காபி மூலம் உடல் எடை குறைதல் தற்காலிகமான ஒன்றாகும். காபியை வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் குடிக்காமல், இனி உடல்நலத்திற்காகவும், உடல் எடை குறைப்புக்காகவும் குடிக்கலாம்.