ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்கூட பரிசோதனைகளில் புதிதாக 75 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்திருந்தார்.
குறித்த ஒமிக்ரோன் நோயாளர்கள் பதிவான பிரதேசங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒமிக்ரொன் BA.1 வகை கொழும்பு, அவிசாவளை, பொரலஸ்கமுவ, ஹோமாகம, கட்டுகொட, கொஸ்கம, மடபாத்த, பாதுக்க, பரகடுவ மற்றும் வெல்லம்பிட்டி பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒமிக்ரொன் BA.2 வகை அவிசாவளை, பதுளை, கொழும்பு, காலி, கொன்னாவல, கல்கிஸை, நுகேகொடை மற்றும் இந்தியாவில் இருந்து வந்த பயணிகள் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒமிக்ரொன் B.1.1.529 அங்கொட, கொழும்பு, ருவான்வெல்ல, கல்கிஸை, நுகேகொடை, பாதுக்க மற்றும் அவிசாவளை பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.