உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33.89 கோடியாக அதிகரித்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 கோடியே 89 லட்சத்து 73 ஆயிரத்து 839 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 கோடியே 7 லட்சத்து 62 ஆயிரத்து 358 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 27 கோடியே 26 லட்சத்து 28 ஆயிரத்து 995 பேர் குணமடைந்துள்ளனர்.
ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 55 லட்சத்து 82 ஆயிரத்து 486 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா தொடர்ந்து இரண்டாவது இடத்திலும், பிரேசில் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன.அமெரிக்காவில் ஒரு நாளில் 463,633 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
ஒரேநாளில் 1,948 பேர் பலியாகி உள்ளனர்..இந்தியாவில் இதுவரை 38,216,399 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.. நேற்று ஒரே நாளில் 315,158 கோரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன…இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரேஸில் உள்ளது.. 23,420,861 பேர் இதுவரை அங்கு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.. நேற்று ஒரே நாளில் 205,310 பேருக்கு தொற்று உறுதியாக உள்ளது.