
100 படத்தை இயக்கிய ஷாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள மற்றொரு படம் டிரிகர். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார்.
அருண் பாண்டியன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இரும்புத்திரை படத்தை இயக்கிய பி. எஸ். மித்ரன் வசனம் எழுதி இருக்கும் இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. யு/ஏ சான்று கிடைத்துள்ளது. வருகிற செப்., 23ம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.