ஜெயம் ரவியுடன் இணைந்த பிரியங்கா மோகன்

டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் படங்களை தொடர்ந்து ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்திருக்கிறார் பிரியங்கா மோகன். அதோடு தற்போது ராஜேஷ் எம்.இயக்கும் ஜெயம் ரவியின் 30-வது படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நேற்று முதல் ஊட்டியில் தொடங்கி இருக்கிறது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறப் போகிறது.

அண்ணன்- தங்கை பாச போராட்டத்தை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் நட்டி நடராஜ், விடிவி.கணேஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.