விக்ரமின் கோப்ரா சென்சார், ரன்னிங் டைம் வெளியானது

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் கோப்ரா. அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ள இந்த படத்தில் இர்பான் பதான், கே.எஸ். ரவிக்குமார், ரோபோ சங்கர், மிருணாளினி ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் கோப்ரா படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்துள்ளார்கள். மேலும் இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கோப்ரா படம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE