ஷங்கர் படத்தை தொடர்ந்து ஹிந்திக்கு செல்லும் ராம்சரண்

தற்போது ஷங்கர் இயக்கும் தனது 15வது படத்தில் நடித்து வருகிறார் ராம்சரண். இந்த படத்தின் ஒரு பாடல் காட்சியில் 1200 நடன கலைஞர்களுடன் இணைந்து ராம்சரண் -கியாரா அத்வானி நடனம் ஆடி உள்ளார்கள். அடுத்தபடியாக ராம்சரண் நடிக்கும் ஒரு ஆக்சன் காட்சியை படமாக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் ஷங்கர். இந்த கட்சியில் அவருடன் இணைந்து 1000 ஸ்டண்ட் நடிகர்கள் நடிக்கப் போகிறார்கள். 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் இந்த சண்டை காட்சிக்கு தேவையான செட் பணிகள் நடந்து வரும் நிலையில் அந்த சண்டை காட்சியில் நடிப்பதற்காக ராம்சரணுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஷங்கர் படத்தில் நடித்து முடிந்ததும் தெலுங்கு இயக்குனர் கவுதம் தென்னனூரி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள ராம்சரண், தற்போது ஹிந்தி படங்களில் நடிப்பதற்கும் பாலிவுட் தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த பிறகு தேசிய மற்றும் உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றுள்ளார் ராம்சரண். அதன் காரணமாகவே அவரை வைத்து படம் தயாரிக்க முன்வந்துள்ள ஹிந்திப்பட தயாரிப்பாளர்கள் பிரம்மாண்ட பட்ஜெட்டில் பான் இந்தியா படங்களை தயாரிக்கப்போகிறார்களாம். அதனால் ஷங்கர் மற்றும் கவுதம் தென்னனூரி படங்களில் நடித்ததும் ஹிந்திக்கு செல்கிறார் ராம்சரண்.

Leave a Reply

Your email address will not be published.